சிங்காரா புனல் மின் நிலையத்தை பார்வையிட ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

நீலகிரி : கோடை விழாவை தொடங்கி வைப்பதற்காக நேற்று உதகை வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சிங்காரா புனல் மின்நிலையத்தை பார்வையிட்டார்.

நீலகிரி : கோடை விழாவை தொடங்கி வைப்பதற்காக நேற்று உதகை வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சிங்காரா புனல் மின்நிலையத்தை பார்வையிட்டார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த 16-ம் தேதி உதகை வந்தார். நேற்று உதகை தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அன்றைய தினம் உதகை ராஜ்பவனில் தென் மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் பழங்குடியினர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளைஆளுநர் கண்டு ரசித்தார். இதைத்தொடர்ந்து, இன்று அவர் மசினகுடி அருகே அமைக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் முதல் புனல் நிலையமான சிங்காராபுனல் மின் நிலையத்தை பார்வையிட்டார். நீலகிரி மாவட்டம் குந்தா மின் உற்பத்தி மேற்பார்வை பொறியாளர் ரகு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு புனல் மின் நிலையத்தை சுற்றி காண்பித்தார். ஆளுநருடன் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, காவல்துறை கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா உடனிருந்தனர். 



Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...