நீலகிரி : கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக, அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழைப் பெய்து வருவதால், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் பல்வேறு பகுதிகளில் புதிய அருவிகள் விழத் துவங்கியுள்ளன. குன்னூர், காட்டேரி மற்றும் லால்ஸ் நீர்வீழ்ச்சி, கோத்தகிரியில் உள்ள கேத்தரின் நீர் வீழ்ச்சி, உயிலட்டி நீர் வீழ்ச்சி உள்ளிட்ட நீர் வீழ்ச்சிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், இதனைக்கான சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், சாலை ஓரங்களில் இயற்கையாக தோன்றியுள்ள புதிய அருவிகள் இவ்வழியாக பயணிப்போரை பரவசப்பட வைத்துள்ளது.

இந்த அருவிகள் குளிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்றாலும், பார்ப்பதற்கு வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் காட்சித் தருவது இவ்வழியாக பயணிப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.