கோவை : நரசிபுரம் அருகே தடை செய்யப்பட்ட வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக உளவுத் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், அதிரடி படையினர் வனத்துறையினர் இணைந்து மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, வனத்துறையினரால் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று 4 பேரை நரசிபுரம் அருகே உள்ள வைதேகி நீர்வீழ்ச்சி அருகே வனத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை செய்ததில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். பின்னர் நடத்திய தொடர் விசாரணையில் இவர்கள் அத்துமீறி வனத்துக்குள் புகுந்து தடை செய்யப்பட்ட நீர் வீழ்ச்சிக்கு குளிக்க சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அபுபக்கர் (52), விஜயகுமார் (42), ஜேம்ஸ் (35), பிரவீன் குமார் (30), ஆகியோருக்கு தலா 25 ஆயிரம் வீதம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதத் தொகை செலுத்திய பின் நான்கு பேரும் வாகனத்துடன் விடுவிக்கப்படுவார் என வனத்துறையினர் தெரிவித்தனர். மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் பிடிபட்டதால் நான்கு பேரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.