கோவை : கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது :- இந்துத்துவா என்ற கொள்கையால் பாதிக்கப்பட்டே கோட்சே காந்தியை சுட்டுக்கொன்றார். இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. விளக்கமளிக்க வேண்டும். கமல் மீதான தாக்குதல்கள் எல்லை தாண்டிய விபரீதம். இதுதானா ஜனநாயக முறை..?. கலவரத்தை தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் கமலின் கருத்து சுதந்திரத்தை தடுக்கும் வகையில் பிரச்சாரத்திற்கு தடை விதித்துள்ளது. தனியாக தொகுதிகளை பெற்று நிற்காத குறையாக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. பிரக்யா தாக்கூரின் கருத்தை கண்டிப்பதாகவும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதாகவும் பா.ஜ.க. கூறுவது கண்துடைப்பு. உண்மையாகவே நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், அவரை கட்சியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும்.
கமல் இந்து மதம் குறித்து எந்த இடத்திலும் அவதூறு பேசவில்லை. ஆனால், அவருக்கான பிரச்சார வாய்ப்பு மறுக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு விரோதமானது. மக்கள் நீதி மய்யத்தின் வேண்டுகோளை ஏற்று சூலூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் கைப்பாவையாக செயல்படுவதால், பிற கட்சிகளின் கோரிக்கை தொடர்பாக ஒரு போதும் நடவடிக்கை எடுக்காது, என சுப்பராயன் தெரிவித்தார்.