கோவை : கோவை வைசியாள் வீதியில் உள்ள நகை விற்பனை அலுவலகத்தின் முதலாளியை ஏமாற்றி 400 கிராம் தங்க நகைகளை மோசடி செய்த சம்பவத்தில், கடையின் ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் (41). இவர், வைசியாள் வீதியில் நகை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். சங்கரேஸ்வரன் வெளியில் தங்கக்கட்டிகளை வாங்கி, அதை தங்கப்பட்டறைகளில் கொடுத்து கம்மல், மோதிரம் ஆகிய நகைகளாக செய்து வாங்கி வந்து விடுவார். பின்னர், அந்த ஆபரணங்களை தன் ஊழியர்கள் மூலம் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு விற்பனை செய்வார். இந்த நிலையில் சங்கரேஸ்வரன் கடைவீதி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் அளித்தார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது ;- கடந்த 9-ம் தேதி நான் 5 கிலோ அளவுள்ள கம்மல், மோதிரம் நகைகளை ஊழியரான வேலாண்டிபாளையத்தை சேர்ந்த சண்முகவேல் (45) என்பவரிடம் கொடுத்து சத்தியமங்கலத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு விற்பனை செய்து வருமாறு கூறினேன். அதன்படி, வியாபாரம் முடித்துக் கொண்டு அன்று மாலை வந்த சண்முகவேல், ஒரு கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு விட்டது. மீதமுள்ள 4 கிலோ நகைகள் உள்ளது என ஒப்படைத்தார். அதை பரிசோதித்த போது, 450 கிராம் தங்க நகை குறைவாக இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும். இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது முறையாக பதில் தெரிவிக்கவில்லை, என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இப்படியிருக்க கடை உரிமையாளரின் புகாரின்படி ஆய்வாளர் வேளாங்கண்ணி உதயரேகா தலைமையிலான கடைவீதி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், ஊழியர் சண்முகவேலுடன் குற்றத்திற்கு உறுதுணையாக ஆறுமுகம் என்பவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதேபோல, இவர்கள் திருடிய நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றி விற்றுள்ளனர். இந்த நிலையில், போலீசார் இவர்களிடம் இருந்து 400 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஐந்தில் ஆஜர்படுத்தி இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.