தோல்வி பயத்தினாலேயே கமல்ஹாசன் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு : இறுதிகட்ட பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பேச்சு

கோவை : ஆளும் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி பயத்தினாலேயே கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக இறுதிகட்ட பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமி தெரிவித்துள்ளார்.

கோவை : ஆளும் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி பயத்தினாலேயே கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக இறுதிகட்ட பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமி தெரிவித்துள்ளார்.



தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் காலியாக இருந்த 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற்றது. காலியாக இருந்த சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடத்தி, வாக்கு எண்ணிக்கை 23-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து, கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றது.



முன்னதாக, சூலூர் இடைத்தேர்தலுக்கான இறுதிகட்ட பிரச்சாரத்தை மக்கள் நீதி மய்யம் மேற்கொண்டது. சர்ச்சைப் பேச்சில் சிக்கி கொண்டதால், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இந்த சூழலில், கட்சியின் பலத்தை காட்ட வேண்டும் என்ற முனைப்பில் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் சின்னியம்பாளையத்தில் இருந்து தென்னம்பாளையம், சோமனூர், சுல்தான்பேட்டை வரைஇருசக்கர வாகனப் பேரணி நடத்தினர்.



இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜி. மயில்சாமி பேசியதாவது :-மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் தரும் ஆதரவை வெளிக்காட்டமல் தடுக்க வேண்டும் என எதிர்கட்சிகள் நினைக்கின்றன. மேலும், தோல்வி பயத்தினாலேயே எங்கள் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, இவ்வாறு கூறினார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...