கோவையில் நாடாளு. தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை : நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரை முருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார், மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா இராமசாமி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்துகட்சி முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், மாவட்ட தேர்தல் அலுவலர் கு.ராசாமணி தெரிவித்ததாவது:- கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மே 23-ம் தேதியன்று நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கென கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் 20 மேசைகளும், மற்ற 5 சட்டமன்றத் தொகுதிகளில் 14 மேசைகளும் அமைக்கப்படவுள்ளன. வேட்பாளர்கள் ஒவ்வொரு மேசைக்கு ஒவ்வொரு எண்ணிக்கை இட முகவர் மற்றும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேசைக்கென ஒரு முகவர் என மொத்தம் 15 எண்ணிக்கை இட முகவர்களை நியமனம் செய்யப்படவுள்ளனர்.

கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் 20 மேசைகள் அமைக்கப்படுவதால் இத்தொகுதியில் மட்டும் 21 எண்ணிக்கை இட முகவர்களை நியமனம் செய்யப்படவுள்ளனர். தபால் வாக்குகள் எண்ணிக்கைக்காக தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் நான்கு மேசைகள் அமைக்கப்படும். இதற்கென 4 எண்ணிக்கை இட முகவர்களை வேட்பாளர்கள் நியமனம் செய்யலாம். எண்ணிக்கை இட முகவர்களை வேட்பாளரோ அல்லது அவருடைய தேர்தல் முகவரோ நியமனம் செய்யலாம். வாக்கு எண்ணிக்கை இட முகவர்கள் நியமனம் தொடர்பாக படிவம் 18-ஐ பூர்த்தி செய்து புகைப்படங்களுடன் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் சமர்ப்பித்து அடையாள அட்டை மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட படிவம் -18- ஐ பெற்றுக்கொள்ளவேண்டும். மே 23-ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்குவதால் வாக்கு எண்ணிக்கை இட முகவர்கள் அனைவரும் அன்று காலை 6 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருகை புரிய வேண்டும். வரும் போது அடையாள அட்டையை தவறாமல் கொண்டு வரவேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்க இயலாது. வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட எண்ணிக்கை மேசை அருகில் தான் இருக்கவேண்டும். எல்லா இடங்களிலும் நடமாடவும், செல்லிடப்பேசியை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அடிப்படை வசதிகள் வாக்கு எண்ணிக்கை கூடத்திற்கு அருகிலே செய்து கொடுக்கப்படும். வாக்கு எண்ணிக்கை கூடத்திற்குள் எண்ணிக்கை இட முகவர்களுக்கான இருக்கை வசதி

அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளின் வேட்பாளர்கள், மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்கள், பிற மாநிலக் காட்சிகளின் வேட்பாளர்கள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என்ற முன்னுரிமைப்படி அமைக்கப்படும். வாக்கு எண்ணும் பணிக்காக வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களும், வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களும் நியமிக்கப்படுவர். இவர்களுடன் நுண்பார்வையாளர் ஒருவரும் நியமிக்கப்படுவர். நுண் பார்வையாளர் மத்திய அரசு அல்லது மத்திய அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனப் பணியாளராக இருப்பார். மேலும், இவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டமன்றத் தொகுதி மற்றும் மேசை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் கணினி மூலம் சுழற்சி முறையில் செய்து நியமிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கை அன்று காலை 08.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் அந்தந்த சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களில் தொடங்கப்படும். தபால் வாக்குச்சீட்டு எண்ணிக்கை இறுதி செய்யப்படுவதற்கு முன்னர் எந்தவொரு சூழ்நிலையிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கையின் அனைத்துச் சுற்றுகளின் முடிவுகளும் அறிவிக்கப்படமாட்டாது.

நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் சரிபார்க்கும் காகித சோதனைச் சாதனத்தின் காகித சீட்டுகள் சரிபார்க்கும் பணிக்காக 5 வாக்குச் சாவடிகள், வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரால் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையின் இறுதிசுற்று முடிந்த பின்னர், நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டமன்றத்தொகுதியிலும் மேலோட்டமாக தெரிவு செய்யப்பட்ட 5 வாக்குச் சாவடியின் வாக்காளர் சரிபார்க்கும் காகிசோதனைச் சாதனத்தின் காகித சீட்டுகள் சரிபார்க்கும் பணி ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக சரிபார்க்கப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...