சூலூர் இடைதேர்தலுக்கு 36 மணி நேரம் மட்டுமே தேர்தலுக்கு இருக்கிறது : விழிப்புடன் செயல்பட எ.வ.வேலு அறிவுறுத்தல்

கோவை : சூலூர் இடைதேர்தலுக்கு 36 மணி நேரம் மட்டுமே தேர்தலுக்கு இருப்பதாகவும், இந்த 36 மணி நேரம் விழிப்புடன் இருந்து செயல்படவேண்டும் என பிரச்சார நிறைவு நிகழ்வின் போது தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு தெரிவித்தார்.

கோவை : சூலூர் இடைதேர்தலுக்கு 36 மணி நேரம் மட்டுமே தேர்தலுக்கு இருப்பதாகவும், இந்த 36 மணி நேரம் விழிப்புடன் இருந்து செயல்படவேண்டும் என பிரச்சார நிறைவு நிகழ்வின் போது தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. சூலூர் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தினை நிறைவு செய்தன. தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி தனது பிரச்சாரத்தை சூலூர் மகளிர் மேல்நிலை பள்ளி அருகே உள்ள மைதானத்தில் நிறைவு செய்தார். இந்தப் பிரச்சார நிறைவு நிகழ்வில், சூலூர் தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் எ.வ.வேலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பிரசாரத்தை நிறைவு செய்தபின் கூட்டத்தினர் மத்தியில் சூலூர் தி.மு.க. பொறுப்பாளர் எ.வ.வேலு பேசினார். அப்போது, அவர் பேசியதாவது :- அ.தி.மு.க. வெற்றி பெற்றால் மக்கள் தேவைகளை நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகின்றார். சூலூரில் வெற்றி பெற்றால் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கப்போம் என்றால், இது வரை மக்கள் பிரச்சினை தீர்க்கவில்லை என அவரே ஒப்புதல் கொடுக்கின்றார். விவசாயிகளின் பிரச்சினைகளை எதையும் இந்த அரசு தீர்க்கவில்லை. நெசவாளர்களின் 65 கோடி கடனை ரத்து செய்வது குறித்து பரீசிலிக்கப்படும் என முதலமைச்சர் சொல்வது நடக்காது.



ஆட்சி மாற்றத்திற்கு சூலூர் பகுதி வாக்காளர்கள் வாக்களியுங்கள். இந்த அரசு கையாலாகாத அரசு என்பதற்கு ஒரே சான்று நீட் தேர்வு. நீட் தேர்விற்கு விலக்கு என்று தீர்மானம் போட்டு, 3 ஆண்டுகாலமாக இந்த அரசு என்ன செய்தது..?. நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கி கொடுக்காமல் 3 ஆண்டுகளாக தூங்கிக்கொண்டு இருக்கின்றனர் என்று ஒத்துக்கொள்கின்றனரா..?.

அ.தி.மு.க ஆட்சியில் மின்கட்டண உயர்வு, பேருந்து கட்டண விலை உயர்வு போன்றவை ஏற்பட்டு இருக்கின்றது. சூலூரில் இளைஞர் வேலை வாயப்புப்பிற்கு இந்த அரசு எதுவும் செய்யவில்லை. அருந்ததியர் காலனிகளில் இந்த அ.தி.மு.க. அரசு எந்த வசதிகளையும் செய்யவில்லை. இன்னும் 36 மணி நேரம் மட்டுமே தேர்தலுக்கு இருக்கின்றது. இந்த 36 மணி நேரம் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும், என எ.வ. வேலு தெரிவித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...