குந்தா அருகே கடமான் மாமிசத்தை சமைத்து உண்ட 4 பேர் கைது : ஒருவர் தலைமறைவு

நீலகிரி : குந்தா அருகே கடமான் மாமிசத்தை சமைத்து உண்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.


நீலகிரி : குந்தா அருகே கடமான் மாமிசத்தை சமைத்து உண்ட 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.



நீலகிரி மாவட்டம் குந்தா சரகத்துக்கு உட்பட்ட பெல்லத்தி கொம்பை ஆதிவாசி கிராமத்தில், சிலர் கடமான் கறி சமைத்து வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறை உதவி காப்பாளர் சரவணன், ரேஞ்ஜர் சரவணன் ஆகியோர் அடங்கிய வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்திய போது, சிலர் கடமான் மாமிசத்தை சமைத்து கொண்டிருந்தது தெரிய வந்தது.பின்னர், ரங்கசாமி, ரமேஸ், சரவணன், நாகேஸ் ஆகியோரை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மலைப் பகுதி பாறையிலிருந்து கடமான் தவறி விழுந்து இறந்ததாகவும், அதை சமைத்ததாகவும் கூறினர். இதையடுத்து, வனத்துறையினர் 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து உதகை சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கிருஷ்ணன் என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...