கோவை : ஆனைகட்டி சாலைகளில் யானைகள் கடப்பதை தடுக்கும் வகையில் அகழிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம்- கேரள மாநிலத்தை இணைக்கும் பிரதான சாலையாக ஆனைகட்டி சாலை உள்ளது. இந்த சாலையானது, யானை வழித்தடங்கள் உள்ள முக்கியப் பகுதியாக இருக்கிறது. எனவே, அடிக்கடி யானைகள் சாலை பகுதிகளுக்கு வருவதால், மனித - யானை மோதல்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்கும் வகையில், வன எல்லைகளில் உள்ள கிராமங்கள் மற்றும் பல்வேறு முக்கிய பகுதிகள் சுமார் 7 கி.மீ. தொலைவிற்கு வனத்துறையின் சார்பில் அகழி அமைக்கும் பணி கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதேவேளையில், பனப்பள்ளி முதல் கண்டிவள்ளி வரையிலான சுமார் 4 கி.மீ தொலைவிற்கு அகழி தோண்டும் பணிகள் முடிவடைந்துவிட்டன.

மேலும், புதூர் - பனப்பள்ளி பகுதியுடன் சேர்த்து, கொண்டனூர்- ஆஷ்ரம் இடையே சுமார் ஒரு கி.மீ.க்கு அகழிகள் தோண்டப்பட்டுள்ளன. “யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய பகுதிகளை கண்டறிந்து, மனித-யானை மோதல் சம்பவங்களை குறைக்கும் முயற்சியாக அகழிகள் தோண்டப்படுகின்றன. மேலும், தேவையில்லாத பகுதிகளில் யானைகள் சாலைகளை கடப்பதையும் தடுக்கலாம்.” என்கிறார் வன அதிகாரி சுரேஷ். புது இடங்களில் அகழிகள் தோண்டப்படுவதால், மாற்று இடங்களை தேடி செல்லும் நிலை உருவாகும் என உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஆஷ்ரம் நீர்வீழ்ச்சி அருகே அகழி தோண்டப்பட்டுள்ள பகுதியின் சிறிது தூரத்தில் யானைகள் கடந்து செல்லும் பகுதி என்ற அறிவிப்பு பலகை வைக்கப்ப்ட்டுள்ளது. மேலும், போளுவாம்பட்டி - அட்டப்பாடி இடையிலான யானைகள் வழித்தடம் எனவும் அந்தப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “தனியார் செங்கல் சூளை அருகே யானைகள் தொடர்ச்சியாக வந்து செல்வதையும், வாகனங்களில் அடிபடும் சம்வங்களும் நிகழ்கிறது. இதனால், அப்பகுதியில் எப்போதும் பதற்றமான சூழலே நிலவி வருகிறது,” என கூறுகிறார் ஆலமரமேடு குடியிருப்புவாசி.
மேலும், வனங்களில் நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால், அண்மைக் காலமாக தண்ணீரை தேடி யானைகள் சாலைகளை கடந்து செல்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக, வனப்பகுதிகளுக்கு நடுவே தற்காலிகமாக கட்டப்பட்ட சிமெண்ட் தொட்டிகள் சேதமடைந்திருப்பதை வனத்துறையினர் சரி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.