இன்று மாலையுடன் சூலூர் இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்வு : இருசக்கர வாகனங்களில் தி.மு.க. வினர் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு

கோவை : சூலூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், தி.மு.க.வினர் இருசக்கர வாகனங்களில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை : சூலூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், தி.மு.க.வினர் இருசக்கர வாகனங்களில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.



17-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நாடு முழுவதும் நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் காலியாக இருந்த 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற்றது. காலியாக இருந்த சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடத்தி, வாக்கு எண்ணிக்கை 23-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து, கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று மாலை ஐந்து மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற உள்ளது. இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் கடைசி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக, சூலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் பொங்கலூர். நா.பழனிசாமி திறந்தவெளி ஜீப்பில் பிரச்சாரம் மேற்கொள்ள அவரது ஆதரவாளர்கள் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளனர். இருகூரில் துவங்கிய இந்த இரு சக்கர வாகன பிரச்சாரம், சிந்தாமணிபுதூர், பள்ளபாளையம், கண்ணம்பாளையம், இராவத்தூர், ராசிப்பாளையம், மாதப்பூர், ராமாச்சிபாளையம், சோமனூர், சாமளாபுரம், செங்கதுறை, காடம்பாடி, காங்கேயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வந்து சூலூரில் மாலை நிறைவடைகிறது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...