தேனி : நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், தேனி தொகுதியில் போட்டியிட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் எம்.பி. ஆகிவிட்டதாக பொறிக்கப்பட்ட கல்வெட்டால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார்.
இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23ஆம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், தேனி மாவட்டம் குச்சனூர் கோவிலில் நன்கொடை வழங்கியதாக பொறிக்கப்பட்ட கல்வெட்டில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார், தேனி மக்களவை உறுப்பினர் என பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை எழுப்பியது.

மேலும், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே, ஓ.பி.எஸ். மகன் எம்.பி. என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை அகற்ற வேண்டும் என்று எதிர்கட்சிகள் முழங்கினர். இதையடுத்து, ஏற்கனவே இருந்த கல்வெட்டில், மற்றொரு கல்வெட்டு வைக்கப்பட்டு, ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமாரின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.