கரூர் : வேலாயுதம்பாளையம் பகுதி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் மீது காலணி வீசிய சம்பவம் குறித்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 12-ம் தேதி அரவக்குறிச்சி தொகுதி பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர்தான் நாதுராம் கோட்சே எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளும் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. மேலும், இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், 16-ம் தேதி இரவு கரூரில் வேலாயுதம்பாளையம் பகுதியில் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் மீது நடந்த காலணி, முட்டை மற்றும் கற்கள் வீச்சு தாக்குதலால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சினேகன் மற்றும் தொண்டர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் மண்டல பொருப்பாளர் கவிஞர் சினேகன் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, பா.ஜ.க. நிர்வாகி ராமச்சந்திரன் மற்றும் முகம் தெரியாத நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கமல்ஹாசனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகவும், எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சார்பில் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.