நீலகிரி : நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால், சாலைகளின் குறுக்கே விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உதகை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு, மஞ்சூர் போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இந்த நிலையில், குன்னூரில் அதிகாலையில் பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழும் நிலை ஏற்பட்டது. மேலும், அதிகாலை நேரத்தில் காற்றின் தாக்கமும் அதிகம் இருந்ததால், குன்னூர் மலை ரயில்நிலையத்தில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து, அங்கிருந்த சொகுசு காரின் மீது விழுந்தது. இதில், அந்த காரின் மேல்பகுதி சேதமடைந்தது. இதேபோன்று, டி.டி.கே. ஏ. சாலையிலும் 3 மரங்கள் விழுந்தது. இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. சாலையில் விழுந்த மரங்களை தீயணைப்புத் துறையினர் உடனுக்குடன் அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.