சூலூரில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் தடை

கோவை : சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி, சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

கோவை : சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி, சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். 

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ம் தேதி பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசும் போது,‘ சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே,’’ என்றார். அவரது பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல, தமிழகத்தில் உள்ள இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய வேண்டும் எனவும், அவர்களின் பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து புகார்கள் கொடுத்து வந்தனர். இதில், கோவையில் இந்து முன்னணி, பாரத் சேனா போன்ற அமைப்பினர் காவல் நிலையங்களில் புகார்கள் அளித்தனர். இதற்கிடையே, பிரச்சாரத்துக்கு சென்ற கமல்ஹாசன் மீது செருப்பு வீச்சு, கல் வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேரியது.

இந்த நிலையில், கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் உள்ள கண்ணம்பாளையம், சூலூர், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி பிரிவு, கருமத்தம்பட்டி உள்ளிட்ட 6 இடங்களில் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி, காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். 

இதனிடையே, ஒருவேளை குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் பிரச்சாரம் செய்ய அனுமதி கொடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்தால், மக்கள் நீதி மையத்தின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் வலிமையை, அரசுக்கும் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளுக்கும் வெளிப்படுத்த வேண்டும் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...