கோவையில் சாலை ஓரத்தில் கதறி அழுது கொண்டிருந்த பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை கல்லூரி மாணவர்களால் மீட்பு

கோவை : கோவை அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள அரசு கலை கல்லூரி சாலையில் உள்ள நடைபாதையில் கட்டைப்பையில், கதறி அழுது கொண்டிருந்த சுமார் பிறந்து 7 நாட்களே ஆன குழந்தையை கல்லூரி மாணவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


கோவை : கோவை அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள அரசு கலை கல்லூரி சாலையில் உள்ள நடைபாதையில் கட்டைப்பையில், கதறி அழுது கொண்டிருந்த சுமார் பிறந்து 7 நாட்களே ஆன குழந்தையை கல்லூரி மாணவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள இந்துஸ்தான் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் சந்திரசேகர் (19) மற்றும் சத்தியதரன் (18). இவர்கள் இருவரும் நேற்று இரவு தேர்வுக்கான புத்தகங்களை வாங்கிக் கொண்டு கலைக் கல்லூரி சாலை வழியாக தங்களின் இருப்பிடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் குழந்தையின் அழுகை சத்தம் தன்னந்தனியே கேட்பதை கண்டு நோட்டமிட்டனர். அரசு மருத்துவமனையின் பின் வாசலின் அருகே உள்ள நடைபாதையில் இருந்த கட்டைப்பையில் பிறந்து சுமார் 7 அல்லத்கு 8 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கதறி அழுது கொண்டிருந்தது. இதைக்கண்ட மாணவரில் ஒருவர் குழந்தையை பாதுகாத்தபடி நின்றார். மற்றொருவர் கோவை அரசு மருத்துவமனைக்கு தகவல் சொல்ல சென்றார். பின்னர், குழந்தையை உடனடியாக பாதுகாக்க 108 ஆம்புலன்சிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 



இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையை மாணவர்கள் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மருத்துவர்கள் குழந்தையின் உடல் நிலையை பரிசோதித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதைதொடர்ந்து, குழந்தைகள் நலத் துறையினரும், பந்தய சாலை போலீசாரும் குழந்தையின் தாய் யார்..?, எப்படி சாலையில் விடப்பட்டார்..? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் தொடர்ச்சியாகவே சாலை ஓரங்களில் குழந்தைகளை அனாதையாக தவிக்க விட்டு செல்லும் சம்பவம் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...