22 தொகுதி இடைத்தேர்தலிலும் வென்று தி.மு.க. பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும்: இருகூர் பிரச்சாரத்தில் ஸ்டாலின் நம்பிக்கை

கோவை : 22 தொகுதி இடைத்தேர்தலிலும் வென்று பெரும்பான்மை பலத்தோடு தி.மு.க. ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை : 22 தொகுதி இடைத்தேர்தலிலும் வென்று பெரும்பான்மை பலத்தோடு தி.மு.க. ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் இருகூர் பகுதியில் சூலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :-தேர்தலுக்காக மட்டும் மக்களை தேடி வருபவர்கள் நாங்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும், மக்களோடு மக்களாக இருப்பவர்கள். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியை ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டுமென வாக்களித்தது போல மோடியின் எடுபுடி எடப்பாடி ஆட்சியை அகற்ற இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி ஆட்சி மைனாரிட்டி ஆட்சி. ஆட்சியை காப்பாற்ற 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்தனர். 22 தொகுதி இடைத்தேர்தலிலும் வென்று தி.மு.க. பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மர்ம மரணத்தை கண்டறிந்து, காரணமனவர்களை ஆயுள் தண்டனை கைதியாக சிறைக்குள் தள்ளுவோம். இதைக்கூறுவதால் அ.தி.மு.க.விற்கு வாக்களித்தவர்கள் தி.மு.க.விற்கு வாக்களிக்க உள்ளனர். அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. எதிர்கட்சியாக கூட வர முடியாது. 

தி.மு.க. ஆட்சிக்கு வருவதை தடுக்க 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவ்விவகாரத்தில் நீதிமன்ற தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்ற விடுமுறை காரணமாக அ.தி.மு.க. மேல்முறையீடு செய்ய முடியாது. மேலும், ஜனநாயகத்தை படுகொலை செய்து ஆட்சியை தக்க வைக்க நினைத்ததால், மே 23-க்கு பிறகு மோடி பிரதமர் பதவியில் இருக்க மாட்டார். நான் ஆட்சிக்கு வர அலைவதாக எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார். ஆட்சிக்கு வர நான் அலையவில்லை. மக்கள் எடப்பாடி பழனிசாமியை அகற்ற விரும்புகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, விஷவாயு. ஜெயலலிதா இறந்ததால் தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக உள்ளார். 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.மாநிலத்தில் சர்வதிகார ஆட்சி நடைபெறுகிறது. மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமிக்கு விருது வழங்கியவர்களை அடித்து உதைக்க வேண்டும். தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு ஆறு அடி நிலத்தை தர மறுத்தவர்களுக்கு, தமிழகத்தில் ஆட்சி நடத்த இடம் தரலாமா..?. அ.தி.மு.க. ஆட்சியை மாற்ற தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும், என வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...