மோடியின் எடுபுடியாக இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் : சூலூர் பிரச்சாரத்தில் ஸ்டாலின் வலியுறுத்தல்

கோவை : மோடியின் எடுபாடியாக இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டுமென அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கோவை : மோடியின் எடுபுடியாக இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டுமென அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் முத்துக்கவுண்டன்புதூர் பகுதியில் சூலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசியதாவது :- 19-ம் தேதி நடைபெறும் சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் பொங்கலூர் பழனிசாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி ஆட்சி ஒரு நிமிடம் கூட நீடிக்கக்கூடாது என அப்புறப்படுத்த வேண்டுமென முடிவெடுத்து மக்கள் வாக்களித்து இருக்கின்றனர். மோடியின் எடுபுடியாக இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி எல்லா தரப்பு மக்களுக்கும் பல திட்டங்களை தந்தவர். இப்பகுதியில் உள்ள ஆச்சன்குளத்தை தூர்வாரி, குடிநீர் தட்டுப்பாட்டை நீக்குவோம். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். மேலும், இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். 10-ம் வகுப்பு படித்த ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர் வேலை வழங்கப்படும். கேஸ் சிலிண்டர், கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும். 5 பவுன் வரை தங்க நகை கடன், மாணவர் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும், என ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...