கோவையில் மதுவிற்குள் மிதக்கும் குப்பைகள் : மதுப் பிரியர்கள் அதிர்ச்சி

கோவை : புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மதுபிரியர் வாங்கிய பீரில் குப்பைகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.


கோவை : புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மதுபிரியர் வாங்கிய பீரில் குப்பைகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.



கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (44). இவர் மாநகராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இவர் பணி முடிந்து புலியகுளம் பங்கஜாமில் மில்ஸ் சாலையில் உள்ள கடை எண் 1456 - டாஸ்மார்க் பாரில் மது குடிக்க சென்றுள்ளார். அப்போது, அவர் ஜிங்காரோ என்ற பீரினை வாங்கியுள்ளார். பின்னர், அதை குடிக்கச் சென்றபோது உள்ளே பாசன தோல் போன்ற குப்பைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 



இதையடுத்து, கடை ஊழியரிடம் கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, பாரில் இருந்த மது பிரியர்கள் அனைவரும் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இந்த சம்பவம் குறித்து மதுபிரியர் தங்கவேல் கூறியதாவது ;- நாங்கள் குப்பைகளை கிளறி நாற்றத்தில் வேலை செய்கிறோம். இதில், உடம்பு வலிக்காக கொஞ்சம் குடிக்க வந்தால் அரசு டாஸ்மார்கில் விசத்தை விற்பனை செய்கிறார்கள். இன்று வாங்கிய இந்த பீரை குடித்தால் உடனடியாக விஷம் ஏறி பலியாகி இருப்பேன். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்த விஷயத்தை கண்டு கொள்வதில்லை. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பீர் உடன் வந்த மற்ற பீர்களை சிலர் வாங்கி குடிக்கின்றனர். இது உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடும், என தெரிவித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...