மத்திய அரசு அனுமதி இல்லாமல் சஞ்சய்தத் விடுதலையானார் : பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆர்.டி.ஐ.யில் தகவல்

டெல்லி : மத்திய அரசு அனுமதி இல்லாமல் தண்டனை காலத்துக்கு முன்பே நடிகர் சஞ்சய்தத் விடுதலை செய்யப்பட்டிருப்பது பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

டெல்லி : மத்திய அரசு அனுமதி இல்லாமல் தண்டனை காலத்துக்கு முன்பே நடிகர் சஞ்சய்தத் விடுதலை செய்யப்பட்டிருப்பது பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்த தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

மும்பையில் 1993-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் பலியானார்கள், 2000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் உரிய ஆவணமின்றி ஆயுதம் வைத்திருந்ததாக நடிகர் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. நடிகர் சஞ்சய்தத் கடந்த ஆண்டு பிப்ரவரி 25-ந்தேதி மகாராஷ்டிராவின் எரவாடா சிறையில் இருந்து தண்டனை முடிவதற்கு முன்பே விடுதலை ஆனார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், சஞ்சய்தத் விடுவிக்கப்பட்ட தகவல்களை பற்றி பேரறிவாளன் தரப்பில் எரவாடா சிறை அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு சிறை அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, பேரறிவாளன் தரப்பினர் தகவலறியும் உரிமை சட்டத்தில் மனு செய்திருந்தனர். அதில், சஞ்சய்தத்தை விடுதலை செய்ததற்கு மத்திய அரசின் அனுமதி வாங்கி இருந்தீர்களா..? என கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு சிறை அதிகாரிகள் அளித்த பதிலில் சஞ்சய் தத்தை நன்னடத்தை காரணமாக விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி இல்லாமலேயே மத்திய அரசுடன் கலந்தாலோசிக்காமல் மாநில அரசே சஞ்சய் தத்தை விடுதலை செய்திருப்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. சஞ்சய்தத் சிறையில் இல்லாத 8 மாதங்களையும் நன்னடத்தை சிறை காலத்தில் சேர்த்துள்ளனர். அதையும் கணக்கிட்டுதான் சஞ்சய்தத் விடுவிக்கப்பட்டுள்ளார். சஞ்சய்தத் தேசிய குற்றத்தில் ஈடுபட்டு மத்திய அரசின் தடா சட்டத்தில் தண்டனை பெற்றவர். சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை செய்ததை போலவே அரசமைப்பு சட்டப்பிரிவு 161-ன்படி மாநில அரசே பேரறிவாளனை விடுவிக்கலாம் என அவரது தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...