மரங்களின் பயன்களை உணர்த்த சிலைகளுக்கு அருகே மரங்களை நட்டு கும்பாபிஷேகம் செய்து வழிபடும் புதிய முயற்சி

கோவை : மேட்டுப்பாளையத்தில் பாரம்பரிய மரங்களின் அறிவியல் பயன்களை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், வழிபடும் சிலைகளுக்கு அருகே மரங்களை நட்டு கும்பாபிஷேகம் செய்து வழிபடும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் பாரம்பரிய மரங்களின் அறிவியல் பயன்களை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், வழிபடும் சிலைகளுக்கு அருகே மரங்களை நட்டு கும்பாபிஷேகம் செய்து வழிபடும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகையில் ஸ்ரீவிருக்க்ஷ பீட பூமி என்ற ஆசிரமம் கடந்த ஜந்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு முன்னோர்களின் வழிவந்த உணவு பழக்கங்கள் குறித்தும், அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றியும், சித்தர்கள் விட்டு சென்ற மருந்து முறைகள் குறித்தும் இங்கு வரும் பக்தர்களுக்கு எடுத்துரைப்பதுடன், அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர். குறிப்பாக, நமது பாரம்பரிய மரங்களின் பயன்கள் மற்றும் அவற்றை வணங்குவதால், நமது உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆன்மீகம் மற்றும் அறிவியல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.



இந்த நிலையில், நமது பாரம்பரிய மரங்களை வழிபடும் நோக்கில், 27 நட்சத்திர அதி தேவைகள் என பெயரிட்டு, அதன் சிலை அருகில் அரசன், புங்கை, ஆலமரம், மூங்கில் என தனித்தனியாக 27 வகையான மரங்களை நட்டு அதற்கு கீழ் சிலைகள் அமைத்து இன்று கும்பாபிஷேகம் நடத்தபட்டது. சிரவை ஆதினம் குமரகுரு அடிகளார் மற்றும் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்ட பல முக்கிய ஆன்மீக குருமார்கள் கலந்து கொண்டு, சிறப்பு வேள்விகள் நடத்தி இந்த கும்பாபிஷேக நிகழ்வினை நடத்தி வைத்தனர். மிகவும் வித்தியாசமான முறையில் நடந்த இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பொதுமக்கள், ஆன்மீக சிந்தனையாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும், இந்நிகழ்வில் நமது பண்டைய மருத்துவமுறைகள் அவற்றில் பயன்படுத்தபட்ட மூலிகைகள், செடிகள், கொடிகளும் கண்காட்சிக்கு வைக்கபட்டிருந்தன. அதனை ஆர்வத்துடன் கண்ட பொதுமக்கள் வாங்கியும் சென்றனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...