காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

கோவை : காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி அம்பேத்கர் பெரியார் கலப்புத் திருமணம் செய்தோர் நலச்சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த

கோவை : காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி அம்பேத்கர் பெரியார் கலப்புத் திருமணம் செய்தோர் நலச்சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அசோக் என்பவர் திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த கிருத்திகாதேவி என்ற பெண்ணை கடந்த 12ம் தேதி அன்று சாதி மறுப்பு காதல் திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக மணப்பெண்ணின் உறவினர்கள் பெண்ணை காணவில்லை என ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் காதல் தம்பதியினர், பாதுகாப்பு கேட்டு அளிக்கும் மனுவை ஏற்காமல், வேற்று மாவட்ட காதல் தம்பதிகளின் பாதுகாப்பு மனுவை ஏற்பதில்லை என போலீசார் தெரிவித்துள்ளதால், காவல் நிலையம் செல்ல காதல் தம்பதியினர் அச்சப்படுகின்றனர். 

எனவே, இருவரையும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளதாகவும், மேலும் பெண்ணின் உறவினர்கள் தொடர்ந்து தனக்கு மிரட்டல் விடுப்பதால் சாதி ஆணவக் கொலை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாலும், அது போன்ற நிலை ஏற்படாமல், காதல் தம்பதியருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அம்பேத்கர் பெரியார் கலப்புத் திருமணம் செய்தோர் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...