சென்னை : லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்ற செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை : லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்ற செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
காரமடை அருகே வெள்ளியங்காடு குளத்தில் கடந்த 3ம் தேதி லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தின் காசாளர் பழனிச்சாமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும், எனவே, இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மகன் ரோகின் குமார் மனு தாக்கல் செய்தார். மேலும், பிரேத பரிசோதனை நடக்கும் போது தங்கள் தரப்பு ஆட்கள் இருக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு வந்த போது, காசாளர் பழனிச்சாமியின் மரணம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, பழனிச்சாமியின் மர்ம மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
மேலும், மறுபிரேதப் பரிசோதனை செய்வது தொடர்பாக மாஜிஸ்ட்ரேட்டிடமே குடும்பத்தினர் அணுக வேண்டும்.
பதப்படுத்தப்பட்டுள்ள பழனிச்சாமியின் உடலை பார்க்க குடும்பத்தினருக்கு அனுமதி வழங்க வேண்டும். பழனிச்சாமியின் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. தேவையில்லை. மாஜிஸ்திரேட் விசாரணையே தொடரும். மாஜிஸ்ட்ரேட் விசாரணையில் திருப்தி இல்லாவிட்டால், பழனிச்சாமியின் மகன் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம், என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்