அ.தி.மு.க. அரசிற்கு மக்களை பற்றி கவலையில்லை : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கோவை : அ.தி.மு.க. அரசிற்கு மக்களை பற்றி கவலையில்லை என சூலூர் தொகுதியில் வாக்குசேகரிப்பின் போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்


கோவை : அ.தி.மு.க. அரசிற்கு மக்களை பற்றி கவலையில்லை என சூலூர் தொகுதியில் வாக்குசேகரிப்பின் போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.



கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி பகுதியில் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். மேலும், அப்பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது, ஏராளமான பொதுமக்கள் ஸ்டாலினுடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர். கிராம மக்கய்ளிடம் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதையடுத்து, செலக்கரச்சல் கிராமத்திலும் ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, குடிநீர், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக பொதுமக்கள் ஸ்டாலினிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் கொடுத்த தேநீரை ஸ்டாலின் அருந்தினார்.



இதைதொடர்ந்து, பொதுமக்களிடம் ஸ்டாலின் பேசியதாவது, " குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்காததே காரணம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் இரத்து செய்யப்படும், கேஸ் விலை குறைக்கப்படும். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சணை உள்ளது. 



அ.தி.மு.க. ஆட்சி எந்த பிரச்சனைகளை பற்றியும் கவனிக்காமல் தங்களை காப்பாற்றி கொள்ளவதில் மட்டும் கவனமாக உள்ளது. அ.தி.மு.க. அரசிற்கு மக்களை பற்றி கவலையில்லை பிரதமர் மோடி அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் தலையீடு உள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம், கொடநாடு கொலை, கொள்ளை, பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆகியவை குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விசாரணை நடத்தப்படும். அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்," என தெரிவித்தார்.



Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...