கோவையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர் பலி

கோவை : கோவை - பாலக்காடு சாலையில் உள்ள க.க சாவடி அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை : கோவை - பாலக்காடு சாலையில் உள்ள க.க சாவடி அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை - பாலக்காடு சாலையில் உள்ள நவக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (19). இவர் க.க சாவடி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தில் பணி முடிந்து சென்று கொண்டிருந்தார். இப்படியிருக்க திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், ஆங்காங்கே மரக்கிளைகளும் விழுந்த வண்ணம் இருந்தது. இதில், சாவடி அருகே சூர்யா சென்று கொண்டிருந்தபோது திடீரென மரத்தின் ஒரு கிளை அவர் மீது விழுந்தது. இந்த விபத்தில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து, பொதுமக்கள் உதவியுடன் அவரை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், தலையில் பலத்த காயம் இருந்ததால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது மரத்தின் கிளை விழுந்து இளைஞர் பலியான சம்பவம் கோவையில் உள்ள பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...