கோவை : நீலாம்பூர் பைபாஸ் அருகே எதிர் எதிரே வந்த லாரி மோதி பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்ததில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை - திருச்சி சாலை அருகே உள்ள நீலாம்பூர் பைபாஸில் வாகனங்கள் அதி வேகமாகச் செல்வதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக, லாரி ஓட்டுனர்கள் வாகனங்களை அதிவேகமாக இயக்குவதால், இந்த பைபாஸ் சாலையில் தினமும் இரண்டு முதல் மூன்று விபத்துகள் வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை 3 மணியளவில் இருகூர் ரயில்வே ட்ராக் மேம்பாலம் அருகில் வந்து கொண்டிருந்த லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில், திடீரென இடறி ஒரு லாரி மேலிருந்து ரயில்வே தண்டவாளத்தில் விழுந்தது. இதில் கேரளாவைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.