இந்தியாவில் பிரதமர் மோடி போகாத மாநிலங்கள் இருந்தாலும், வெளிநாடுகள் இல்லை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு கிண்டல்

கோவை : பிரதமர் மோடி இந்தியாவில் போகாத மாநிலங்கள் இருந்தாலும், வெளிநாடுகள் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு கிண்டலாக பேசியுள்ளார்.

கோவை : பிரதமர் மோடி இந்தியாவில் போகாத மாநிலங்கள் இருந்தாலும், வெளிநாடுகள் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு கிண்டலாக பேசியுள்ளார்.

கோவை மாவட்டம் பட்டணம்புதூர் பகுதியில் சூலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த 5 ஆண்டுகளாக நடக்கும் மோசமான மத்திய அரசிற்கு, பாடம் புகட்டும் வகையில் மோடியை அகற்றும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்து இருப்பதாக நம்புகிறேன். பொய்யான வாக்குறுதிகளை அளித்து நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தார். வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை பிறகு கொண்டு வரலாம், வெளிநாட்டில் உள்ள மோடியை இந்தியாவிற்கு கொண்டு வாருங்கள் என இளைஞர்கள் சொல்கிறார்கள். பிரதமர் மோடி இந்தியாவில் போகாத மாநிலங்கள் இருந்தாலும், வெளிநாடுகள் இல்லை. 5 வருடங்களாக பிரதமராக மோடி எதுவும் செய்யவில்லை. பணமதிப்பிழப்பு என்பது மிகப்பெரிய மோசடி. கல்விக்கடன், விவசாய கடன் வாங்கியவர்கள் சொத்துகளை ஜப்தி செய்கிறார்கள். ஆனால், பத்தாயிரம், இருபாதியிரம் கோடி கடன் வாங்கியவர்கள் வெளிநாட்டில் உல்லாசமாக இருக்கிறார்கள். தேர்தல் வெற்றிக்காக பொய்யான வாக்குறுதி அளித்ததை பா.ஜ.க. அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். மோடியோடு உள்ளூர் மோசடிகள் கூட்டு சேர்ந்துள்ளனர். 

அ.தி.மு.க.விற்கு பெயர் அ.தி.மு.க.வே இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கோ, பன்னீர்செல்வத்திற்கோ மக்கள் வாக்களிக்கவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அனாதை போல அமைச்சர்கள் சாகடித்துவிட்டார்கள். வெளிநாட்டுக்கு ஏன் சிகிச்சைக்கு அளித்து செல்லவில்லை. ஜெயலலிதா சிகிச்சையின் போது, உலகம் சுற்றும் பிரதமர் மோடி வந்து பார்க்கவில்லை. ஆனால், ராகுல்காந்தி பார்க்க வந்தார். அண்ணா பெயருடைய அ.தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்தது ஏற்புடையது அல்ல. பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்தற்காக மக்கள் தண்டனை வழங்க வேண்டும். தி.மு.க. பொங்கலூர் பழனிசாமி வெற்றி பெற்றால், ஆட்சி மாற்றம் ஏற்படும். அ.ம.மு.க.விற்கு வாக்களிப்பதால் எந்த மாற்றமும், திருப்புமுனையும் ஏற்படாது. தனியாக கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. கட்சி ஆரம்பிக்காமல் ரஜினிகாந்த் தப்பித்து விட்டார். தனியாக கட்சி நடத்தி ஆட்சிக்கு வர முடியாது. ராகுல்காந்தி பிரதமராகவும், ஸ்டாலின் முதலமைச்சராகவும் வர வேண்டும். நல்லாட்சி வரவும், ஆட்சி மாற்றம் ஏற்படவும் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும், என்றார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...