கோவை : கோவையில் பழிக்குப் பழி வாங்கி தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவை கணபதி பழைய சக்தி சாலை காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள் பிரதீப் மற்றும் தமிழ்வாணன். இவர்கள் அடிதடி வழக்கில் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் கையெழுத்திட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று இருவரும் வழக்கம்போல கையெழுத்திட்டு விட்டு அவினாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. சர்ச் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணனின் உத்தரவின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சதீஷ், ஹரிஹரன், தனபால், சூர்யா ஆகிய நான்கு பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வாக்குமூலமாக கூறியுள்ளதாவது ;- சுமார் இரண்டு மாதத்திற்கு முன்பு எங்கள் நண்பர் சந்தோஷ்குமாரை பிரதீப் உட்பட மூன்று பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், பிரதீப் மட்டும் ஜாமினில் வெளிவந்து தைரியமாக சுற்றி வந்தது எங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதேபோல, பிரதீப் எங்கள் குழுவினரை கொலை செய்ய திட்டம் தீட்டுவதாகவும் தகவல் கிடைத்தது. இதில், பிரதீப் எங்களை கொல்வதற்குள் நாங்கள் அவரை கொல்ல திட்டம் தீட்டினோம். அதன்படி, கணபதியில் கொல்ல முயன்றோம். ஆனால், அந்த இடத்தில் அவர் சிக்கவில்லை. இதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து கையெழுத்திட்டு வெளியே வரும் பொழுது கொலை செய்ய திட்டம் தீட்டினோம். அதன்படி, கையெழுத்திட்டு வந்த பிரதீப் மற்றும் அவரது நண்பரை பின்தொடர்ந்து சென்று அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்தோம், என தெரிவித்தனர்.

இந்த நிலையில், பழிக்குப் பழி வாங்கி, தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் இந்த நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட சதீஷ் மற்றும் சூர்யா ஆகிய 2 பேர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது. அதேபோல, மேலும் இந்த சம்பவத்திற்கு துணை போன இன்னும் நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், கணபதி மோர்மார்க்கெட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் மோதலை தடுக்க போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகரில் பட்டப்பகலில் தைரியமாக ஆயுதங்களைக் கொண்டு தாக்கி கொலை செய்ய முயன்று உள்ள சம்பவம் குற்றவாளிகள் மத்தியில் உள்ள துணிகரத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த துணிகர சம்பவங்களை தடுக்க வேண்டியது அனைவரின் கடமையாக உள்ளது. ஆகவே, கோவை மாநகரில் நடைபெற்று வரும் இந்த துணிகர சம்பவங்களை தடுக்க காவல் துறையினருக்கு மனித உரிமை ஆர்வலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால் குற்றவாளிகளின் துணிகரத்தை தடுக்கலாம் என்பதே நிதர்சனம்.