சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை : திருப்பரங்குன்றம் தொகுதியில் கமல்ஹாசன் பேச்சு

மதுரை : சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை என்றும், கோட்ஸே குறித்த எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என திருப்பரங்குன்றம் தொகுதி பிரச்சாரத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மதுரை : சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை என்றும், கோட்ஸே குறித்த எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என திருப்பரங்குன்றம் தொகுதி பிரச்சாரத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்மத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக் கூறி நாடளவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தினார். இதையடுத்து, அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்த நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கமல்ஹாசன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- அநீதி எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்பேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை. கோட்ஸே குறித்த எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எனது பேச்சை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை, நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை. ஆனால், சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும். உண்மை கொஞ்சம் கசக்கும். ஆனால், கசப்பு மருந்தாகும். மதச் செருக்கு, சாதிச் செருக்கு எல்லாம் நிற்காது. நான் சொன்னது சரித்திர உண்மை. இந்த அரசு வீழும். வீழ்த்தப்பட வேண்டும். வீழ்த்துவோம், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...