திருப்பூர் : திருப்பூரில் 46-வது கோடைகால சர்வதேச பின்னலாடை கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் வாழை மரம் மற்றும் பருத்தி நூலினால் செய்யப்பட்ட புதிய ரக ஆடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரில் 46-வது கோடைகால சர்வதேச பின்னலாடை கண்காட்சி அவினாசி சாலையில் உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சியை ஹேண்ட் லும் மற்றும் காதி துறையின் தமிழ்நாடு முதன்மை செயலர் குமார் ஜெயந்த், நிட் பேர் அசோசியேஷன் தலைவர் சக்திவேல் ஆகியோர் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தனர்.

இந்த கண்காட்சியானது இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் காட்டன் அல்லாத பாலியஸ்டர், வகை ஆடைகள் மற்றும் காட்டன் லெனின் காட்டன் ஆடைகள் மற்றும் வாழை மரத்தின் நார் மற்றும் பருத்தி இழைகளால் செய்யப்பட்ட புதிய ரக ஆடைகள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன.

இந்த கண்காட்சியை காண் இஸ்ரேல், கனடா, ஆஸ்ட்ரேயா, சிங்கப்பூர், அமேரிக்க மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 100 பையர்ஸ், 40-க்கும் மேற்ப்பட்ட அயல் நாட்டு இறக்குமதியாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா சண்முகம், செயலாளர் விஜயகுமார், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.