டெல்லி : ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என்று கமல் பேச்சுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அங்கு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மக்களிடையே அவர் பேசியதாவது :- இந்த இடம் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் நான் இதை சொல்ல விரும்பவில்லை. ஆனால், மகாத்மா காந்தியின் சிலைக்கு முன்னால் நின்று இதை சொல்கிறேன். ஏனெனில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என பேசினார். இது தற்போது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் மற்றும் பல்வேறு இந்து அமைப்பை சார்ந்தவர்கள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பிரதமர் மோடியும் எதிர்ப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளிக்கையில், “எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அவர் இந்து அல்ல. உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை,” என தெரிவித்துள்ளார்.