Breaking : கமலுக்கு எதிரான பா.ஜ.க. மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உய்ர்நீதிமன்றம்

டெல்லி : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு எதிராக பா.ஜ.க. வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

டெல்லி : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு எதிராக பா.ஜ.க. வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

கடந்த 12ம் தேதி அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார். கமலின் இந்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில், பா.ஜ.க.வின் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா, கமல்ஹாசனின் தேர்தல் பரப்புரைக்கு தடைக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற விவகாரத்திற்கு எதற்காக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மனுதாரர், இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் பதில் இல்லை. அதன் காரணமாகவே டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியதாக தெரிவித்தார். இதுதொடர்பாக பதில் கூறிய தேர்தல் ஆணையம், கமல்ஹாசன் மீதான புகார் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான புகாரை ஆய்வு செய்து வருவதாகவும் கூறியது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் வரம்பிற்குள் கமல்ஹாசனுக்கு எதிரான மனுவை விசாரிக்க முடியாது என்று கூறி, அஸ்வினி உபாத்யா தொடர்ந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மனுதாரரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யா, கமலுக்கு எதிரான தனது மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும், தனது புகார் மனுவை விசாரித்த தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், என்று அவர் கூறினார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...