கோவையில் பட்டப்பகலில் இளைஞர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் : துரித நடவடிக்கையால் ஒரே நாளில் குற்றவாளிகளை கைது செய்த போலீசார்

கோவை : கோவை - அவினாசி சாலை அருகே பட்டப்பகலில் இரண்டு இளைஞர்களை இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டிய சம்பவம் நடந்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.

கோவை : கோவை - அவினாசி சாலை அருகே பட்டப்பகலில் இரண்டு இளைஞர்களை இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டிய சம்பவம் நடந்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.



கோவை கணபதி பழைய சக்தி சாலை காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள் பிரதீப் மற்றும் தமிழ்வாணன். இவர்கள் அடிதடி வழக்கில் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் கையெழுத்திட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று இருவரும் வழக்கம்போல கையெழுத்திட்டு விட்டு, அவினாசி சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அவர்களை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளைக் கொண்டு சரமாரியாக தாக்கியது. பின்னர், பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்ததையடுத்து கும்பல் தப்பி ஓடியது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் இரண்டு இளைஞரையும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.



இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், உதவி ஆணையாளர் எழிலரசு மேற்பார்வையில் ஆய்வாளர் தெய்வசிகாமணி தலைமையிலான உதவி ஆய்வாளர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 7 பேர் கொண்ட போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களையும் ஆய்வு செய்தனர். இதில், சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது ஏற்கனவே சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. 



இதையடுத்து, விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார் சதிஷ், ஹரி, தனபால் மற்றும் சூர்யா ஆகியோரை நேற்று இரவு கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவத்தில் வேறு ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் அவினாசி சாலையில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் குற்றவாளிகளை அன்று இரவே கைது செய்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...