அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் பேசிய முழு உரையையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும் : மகேந்திரன் வலியுறுத்தல்

கோவை : கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசிய முழு உரையையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை : கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசிய முழு உரையையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அண்மையில் அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் ஆற்றிய உரையை பிரிவினைவாதத்தை தூண்டுகிற சில அரசியல் கட்சிகள் திரித்தும், திசை மாற்றியும் விசமப்பிரச்சாரம் செய்து வருகின்றன. தலைவர் கமல்ஹாசனின் கருத்துக்களை இந்துக்களுக்கு எதிராக கட்டமைத்து, அதன்மூலமாக தங்களின் பொய் பிரச்சாரத்திற்கு வலு ஏற்றிடத் துடிக்கின்ற சில விசமிகள் புரட்டுவாதத்தினை பரப்பி வருகின்றனர்.

அரவக்குறிச்சியில் பேசிய தலைவர் கமல்ஹாசன், தீவிரவாதம் எந்த மதத்தினாலும், எந்த வடிவத்தினாலும் முன்னெடுக்கப்பட்டால், அது வன்மையாக கண்டிக்க வேண்டியது. ஒவ்வொரு குடிமகனும் ஒருங்கிணைந்து, ஒன்றிணைந்து வாழ்வதற்கு ஏற்ற சமூகம் அமைந்திட வேண்டும், என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார். 

எனவே, உண்மையை வெளிக் கொண்டு வரும் ஊடகங்கள், அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசிய முழு உரையையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும், இவ்வாறு அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...