அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

கமல்ஹாசனின் நாக்கை துண்டிக்க வேண்டும் எனக் கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

கமல்ஹாசனின் நாக்கை துண்டிக்க வேண்டும் எனக் கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆ. அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அரசியல் மாண்பும், தனி மனித கண்ணியமும் துளியுமின்றி, சட்ட விரோதமாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறுவது கடுமையான கண்டனத்திற்குரியது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும் பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருக்கும் ராஜேந்திர பாலாஜி, தன் பதவி பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்து கொண்டுள்ளார். எனவே, அவர் வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார். 

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...