மலர் கண்காட்சியின் போது உதகையில் ஏற்படும் போக்குவரத்தை சீர்படுத்த 'நீலகிரி படை' தொடக்கம்

நீலகிரி : உதகையில் 5 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சியின் போது ஏற்படும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ‘நீலகிரி படை‘ என்ற அமைப்பை காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தொடங்கி வைத்தார்.

நீலகிரி : உதகையில் 5 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சியின் போது ஏற்படும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ‘நீலகிரி படை‘ என்ற அமைப்பை காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தொடங்கி வைத்தார்.

மலைப்பிரதேசமான நீலகிரியில் கோடை சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து செல்கின்றனர். இதனால், உதகை நகரில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த நிலையில், உதகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ‘நீலகிரி படை‘ என்ற புதிய சமூக பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பில் உள்ளவர்கள் மலர் கண்காட்சி நடைபெறும் நாட்களான 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை உதகையில் தலைகுந்தா, பிங்கர்போஸ்ட், காந்தல், சேரிங்கிராஸ், லவ்டேல், எல்லநள்ளி, பட்பயர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கக் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட உள்ளனர்.

இந்த அமைப்பின் தொடக்க நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா கலந்துகொண்டு, நீலகிரி படை அமைப்பை தொடங்கி வைத்தார். மேலும், அமைப்பில் உள்ள 60 பேருக்கு ‘நீலகிரி படை‘ என்று குறிப்பிடப்பட்ட மஞ்சள் நிற டீ-சர்ட் மற்றும் நீல நிற தொப்பியை வழங்கினார்.

பின்னர் அமைப்பில் உள்ளவர்களிடம் அவர் பேசும் போது:- உதகையில் மலர் கண்காட்சி நடைபெறும் நாட்களான வரும் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், பொதுமக்களோடு இணைந்து அதனை சீர் செய்ய வேண்டும். மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கும், துணை காவல் அலுவலகத்துக்கும், எஸ்.பி. அலுவலகத்துக்கும் தகவல் கொடுக்க வேண்டும். இந்த அமைப்பில் உள்ளவர்கள் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. சிறப்பாக செயல்படுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும், இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை காவல் கணிப்பாளர் தங்கவேல், ஆய்வாளர்கள் சதாசிவம், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...