நடிகர் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் எனக் கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பள்ளபட்டி அண்ணா நகரில் அவர் பேசும்போது, சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான் என சாடினார். கமலின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும். யாரை திருப்திப்படுத்த கமல் இவ்வாறு பேசி வருகிறார். யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை சொல்லக் கூடாது. அந்நிய சக்திகளுக்காக பேசி வரும் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இது குறித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கவோ கண்டனம் தெரிவிக்கவோ எவருக்கும் உரிமை உண்டு. அமைச்சர் ராஜேந்திரன் பாலாஜிக்கு கமல்ஹாசனின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றால், அதைக் கண்டிக்கலாம். ஆட்சி அதிகாரம் கையில் இருக்கின்ற காரணத்தினால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இருக்கலாம்.
ஆனால், அதையெல்லாம் விடுத்து கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருக்கிறார். வட மாநிலங்களில் இதுவரை சங்கப் பரிவாரத்தினர் பேசி வந்த வெறுப்புப் பேச்சின் நீட்சியாக இருக்கிறது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு. அண்மைக்காலமாக அவர் பேசுகிற பேச்சுகள் அவர் சங்கப் பரிவாரத்தைச் சேர்ந்தவரோ என்று ஐயம் கொள்ள வைக்கின்றன. அ.தி.மு.க.வே கொஞ்சம் கொஞ்சமாக சங்கப் பரிவாரக் கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு ராஜேந்திர பாலாஜியின் பேச்சு ஒரு சான்றாகும். அவரது வன்முறை பேச்சு கண்டனத்துக்குரியது மட்டுமல்ல தண்டனைக்குரியதாகும். எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவரைக் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
இப்படி வன்முறையைத் தூண்டுகிறவரை அமைச்சர் பதவியில் தொடரச் செய்வது நியாயம் அல்ல. எனவே, அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்,'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.