10 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பைன் ஃபாரஸ்ட் பகுதி : சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்

நீலகிரி : 10 மாத இடைவெளிக்குப் பிறகு திறக்கப்பட்ட பைன் ஃபாரஸ்ட் பகுதியைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி : 10 மாத இடைவெளிக்குப் பிறகு திறக்கப்பட்ட பைன் ஃபாரஸ்ட் பகுதியைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



உதகை - கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது. இந்த அணையின் ஒரு பகுதியில் பைன் மரங்கள் நிறைந்த வனப்பகுதியை காண சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். சாலையில் இருந்து பைன் மரங்களுக்கு நடுவே அணைக்கு நடந்து செல்லும் பகுதி சரிவான பகுதியாக உள்ளது. மரத்தின் இலைகள் உதிர்ந்துள்ள நிலையில், முறையான பாதை இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் வழுக்கி விழும் சூழல் நிலவியது. .



இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி இப்பகுதியை மேம்படுத்த வனத்துறை திட்டமிட்டது. இதற்காக கடந்த ஆண்டு ஜூலை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை. பைன் ஃபாரஸ்ட் சரிவான பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல பைன் மரக் கட்டைகளைக் கொண்டு கைப்பிடிகள் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இதனை முத்தநாடு மந்து சூழல் மேம்பாட்டுக் குழுவினர் தூய்மையாக பராமரித்து வருவதால், இவற்றைக்காண சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...