திருப்பூரில் பழைய அட்டை பெட்டி கிடங்கில் பயங்கர தீ விபத்து : குடியிருப்பு பகுதிகளில் எளிதில் தீ பற்றும் கிடங்குகள் அமைக்கத் தடை

திருப்பூர் : திருப்பூரில் பழைய அட்டை பெட்டி கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், குடியிருப்பு பகுதிகளில் எளிதில் தீ பற்றும் கிடங்குகள் அமைக்கக் கூடாது என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் : திருப்பூரில் பழைய அட்டை பெட்டி கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், குடியிருப்பு பகுதிகளில் எளிதில் தீ பற்றும் கிடங்குகள் அமைக்கக் கூடாது என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்தீஸ்வரன் (42) என்பவர் திருப்பூர் லட்சுமி நகரில் பழைய பேப்பர் கிடங்கு நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென பற்றிய தீயில், அட்டை பெட்டிகள், நூல் கோன்களில் தீ பற்றியது. அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் சப்தம் எழுப்பியதையடுத்து, கிடங்கின் உள்ளே படுத்திருந்த 8 தொழிலாளர்கள் தப்பி வெளியேறினர். இதனையடுத்து, தகவலறிந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், தொடர்ந்து புகைந்து வந்ததால் ஜே.சி.பி வாகனத்தின் உதவியுடன் தீயை அணைத்தனர். 



இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பாரவையிட்டனர். பின்னர், குடியிருப்பு பகுதியின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கிடங்கால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், இனி மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் எளிதில் தீ பற்றும் கிடங்குகள் அமைக்கக் கூடாது எனவும், ஏற்கனவே அமைக்கப்பட்ட கிடங்குகள் தீயணைப்பு துறையினரின் ஆலோசனைக்குப் பிறகு இடமாற்றம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவகுமார் ஆணை பிறப்பித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...