திருப்பூர் : திருப்பூரில் சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள்தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருக்கு ஒரு பெண், இரண்டு ஆண் மகன்கள் உள்ளனர். இவரது மனைவி இறந்த நிலையில், குழந்தைகளை கவனிக்க முடியாத காரணத்தால் விடுதி ஒன்றில் சேர்ந்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு விடுதிக்கு சென்ற பாலசுப்பிரமணியம் குழந்தைகளை கோவில் செல்ல வேண்டும் என கூறி அழைத்து வந்து 12வயதான தனது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மறுநாள் விடுதியில் கொண்டு போய் விட்டுள்ளார். தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை விடுதி நிர்வாகிகளிடம் அச்சிறுமி கூறியதை அடுத்து, திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் திருப்பூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, போக்சோ சட்டத்தின் கீழ் பாலசுப்பிரமணியத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து பாலசுப்பிரமணியம் சிறையில் அடைக்கப்பட்டார்.