திருப்பூர் : சாலை பராமரிப்பு பணியினை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்து மே 28-ம் தேதி சென்னையில் நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் அலுவலகத்தில் குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திருப்பூரில் நெடுஞ்சாலை சாலைப்பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நெடுஞ்சாலை சாலைப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் மங்களம் சாலையில் உள்ள கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற்றது. இதில், அச்சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார். இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- பொள்ளாட்சி சாலை பராமரிப்பு பணியினை தமிழக அரசு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது அரசே பராமரிக்கும்போது ரூ. 88 கோடி மட்டுமே செலவாகும். ஆனால், தனியார் நிறுவனத்திற்கு பணியினை வழங்கியுள்ள நிறுவனத்துடன் ரூ. 247 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடைநிலை ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தாமல் அவர்களை வஞ்சித்து வருகிறது.

இதேபோல், 6 மாவட்ட சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு ஒப்பந்தம் செய்துள்ள தமிழக அரசின் இந்த நடைமுறையை கண்டித்து மே 28-ம் தேதி குடும்பத்துடன் சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம், என தெரிவித்தார்.