கோவை : மதசார்பற்ற அணி அமைப்பது தொடர்பாக தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஸ்டாலினை சந்தித்ததில் தவறு இல்லை எனவும், பா.ஜ.க அல்லாத எல்லா வாய்ப்புகளையும் பரீசிலிப்பது வரவேற்கதக்கது என சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் விளக்களித்துள்ளார்.

கோவை சூலூர் தொகுதியின் தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- மதசார்பற்ற முற்போற்கு கூட்டணி நாடாளுமன்ற தேர்தல், 18 சட்டசபை தொகுதி இடைதேர்தல்களிலும் வெற்றி பெறும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். வரும் 19-ம் தேதி நடைபெறும் 4 தொகுதி இடைதேர்தல்களில் சி.பி.எம் கட்சியானது தி.மு.க.விற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கின்றது. இன்று புதுச்சேரி முதல் மன்னார் வளைகுடா பகுதியில் 25 ஆயிரம் சதுர கிரோமீட்டர் பரப்பளவில் வேதாந்தா நிறுவனத்திற்கு 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடியில் எந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தற்கு எதிராக மக்கள் போராடுகின்றனரோ, அந்த வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உயர்மின் கோபுரங்களுக்கு அனுமதி அளித்து மேற்கு மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுகின்றது. நீட் தேர்வு, 8 வழிச்சாலை போன்ற மக்களுக்கு எதிரான செயல்களை இந்த அரசு தடுக்கவில்லை. தமிழகத்தின் உரிமைகள் பறிக்க பச்சைக்கொடி காட்டுவதை போல, இந்த மாநில அரசு செயல்படுகின்றது. மத்திய அரசு தமிழகத்தின் உரிமைகள் முற்றாக பறித்து வருகின்றது. மோடியின் எடுபிடி அரசாக அ.தி.மு.க. நடந்து வருகின்றது. 4 தொகுதி இடைத்தேர்தல்களில் உதய சூரியன் வெற்றி பெறும். அதற்காக சி.பி.எம். கட்சி உழைக்கின்றது. தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர்ராவ் சில தினங்களுக்கு முன்னர் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்தார். இன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து இருக்கின்றார். தி.மு.க., தலைவர் ஸ்டாலினை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பா.ஜ.க அல்லாத மதசார்பற்ற அணி அமைப்பது தொடர்பாக சந்தித்ததில் தவறில்லை. பா.ஜ.க. அல்லாத எல்லா வாய்ப்புகளையும் பரீசிலிப்பது வரவேற்கத்தக்கது. இதை 3-வது அணி என்று இப்போது சொல்ல முடியாது. 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் மற்ற கட்சிகள் அமர்ந்து பேசி முடிவு செய்யும்.
மாநில தேர்தல் அதிகாரியும், மத்திய தேர்தல் ஆணையமும் மத்தியில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றது. தேர்தல் நடைமுறை இருக்கும் போது, எந்த அரசு திட்டத்தையும் அறிவிக்க கூடாது. ஆனால், தமிழகத்தை ஓரு பாலைவனமாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கின்றது. இது கண்டிக்கத்தக்கது. எதிர்கட்சி தவறு செய்தால் கண்டிக்கின்றனர். ஆனால், மோடி தவறு செய்தால் தேர்தல் ஆணையம் எதுவும் சொல்வதில்லை. முதலமைச்சர், துணை முதலமைச்சர் தோல்வி பயம் வந்து விட்டது. தி.மு.க. 22 இடங்களிலும் வெற்றி பெற்றுவிட்டால், எடப்பாடி அரசு நீடிக்க முடியாது என்ற அச்சம், பீதி காரணமாக 3 எம்.எல்.ஏ களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தோல்வி பயம், பதற்றத்தில் அவர்கள் இதையெல்லாம் செய்கின்றனர், என ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.