கோவை: கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டின் மீதான தடை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது.மேலும், பயன்படுத்த வேண்டிய மாற்றுப் பொருட்களான துணிப்பைகள், சணல்பைகள், பேப்பர் பைகள், வாழை, தேக்கு, தாமரை, மந்தாரை அரச இலைகள் மற்றும் சருகு தென்னைகள், துருப்பிடிக்காத எவர்சில்வர் பாத்திரங்கள், பாக்குமட்டை தட்டுகள், சுட்ட களிமண் தட்டுக்கள், கிண்ணங்கள், குவளைகள், துணியாலான தோரணங்கள், கொடிகள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் கோவை மாநகராட்சியின் பிரதான கூட்டரங்கில், கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகள், சிறு மற்றும் பெரு வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டின் மீதான தடை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மக்கும் குப்பை, மக்காத குப்பையாக பொதுமக்கள் தரம் பிரித்து மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்பது குறித்தும், தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பயன்படுத்த வேண்டிய மாற்றுப் பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள், தன்னார்வு அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்பட்டு கடும் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கோவை மாநகராட்சியின் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகளை மேலும் மேம்படுத்த பொதுமக்கள், வியாபாரிகள், தன்னார்வ அமைப்புகள் ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கேட்டுக் கொண்டார்.