123-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு வரும் 17ம் தேதி நீலகிரிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி : உலக புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி, வரும் 17-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி : உலக புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி, வரும் 17-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் வரும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, உலக புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியை காண உலக முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், இந்தாண்டு 123வது மலர் கண்காட்சி வரும் 17ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைவரும் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்கும் வகையில், 17ம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். 

இந்த நாட்களில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என்றும், 17ம் தேதி விடுமுறை நாளினை ஈடு செய்யும் வகையில் எதிர் வரும் ஜீன் 1-ம் தேதி இம்மாவட்டத்திற்க்கு பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...