நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக பேசியுள்ளார்.

சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக பேசியுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பள்ளபட்டி அண்ணா நகரில் அவர் பேசும்போது, சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான் என சாடினார். கமலின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும். யாரை திருப்திப்படுத்த கமல் இவ்வாறு பேசி வருகிறார். யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை சொல்லக் கூடாது. அந்நிய சக்திகளுக்காக பேசி வரும் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனக் கூறினார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...