மே 23-ம் தேதி துரோகிகளின் ஆட்டம் முடிவுக்கு வரப்போகின்றது : சூலூரில் பிரச்சாரம் செய்த டிடிவி தினகரன் ஆரூடம்

கோவை : வரும் மே 23 ம் தேதி துரோகிகளின் ஆட்டம் முடிவுக்கு வரப்போவதாக சூலூரில் பிரச்சாரம் செய்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

கோவை : வரும் மே 23 ம் தேதி துரோகிகளின் ஆட்டம் முடிவுக்கு வரப்போவதாக சூலூரில் பிரச்சாரம் செய்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரவளி மாதப்பூரில் அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமாருக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியாதாவது :- புரட்சி தலைவரை தி.மு.க. கட்சியை விட்டு நீக்கிய பின்னர், வெகுண்டெழுந்து துவங்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க.. பா.ஜ.க.வின் ஏஜென்டாக ஓ. பன்னீர்செல்வம் மாறியதால் அவரை நீக்கிவிட்டு, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கினோம். கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக்கப்பட்டார். சசிகலா நினைத்திருந்தால் என்னை முதலமைச்சராக ஆக்கியிருக்கலாம். நான் முதலமைச்சராக வேண்டும் என்று கூட அவரிடம் கேட்டு இருக்கலாம். பதவி வெறி பிடித்தவர்கள் நாங்கள் அல்ல. எடப்பாடி பழனிசாமி சிறையில் உள்ள சசிகலாவிற்கு ஆறுதலாக இல்லாவிட்டாலும், அவருக்கு மனகஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றார். பதவி கிடைத்தவுடன் தன்னை முதலமைச்சர் ஆக்கியவரை தூக்கி ஏறிந்து விட்டார். தாய் ஸ்தானத்தில் இருப்பவருக்கு துரோகம் செய்து விட்டார். என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டார். மடியில் கனம் இருக்கும் காரணத்தால் அவர்கள் மோடியிடம் அடங்கிவிட்டார்கள். 

அரசியலில் பயப்படுவர்கள் முறைகேடு செய்து இருக்கக் கூடாது. இவர்கள் தவறு செய்து விட்டு தமிழகத்தை அடகு வைத்து விட்டார்கள். ஹைட்ரோ கார்பன் எடுக்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்து இருக்கின்றனர். பா.ஜ.க அரசு என்னையும்தான் கைது செய்தார்கள். அவர்களால் என்ன செய்து விட முடியும்..?. மோடிதான் சிறந்த பிரதமர் என்கின்றார் பழனிசாமி. சேலம், தரும்புரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் விவசாய நிலங்களை அழிக்க 8 வழி சாலை திட்டத்தை கொண்டு வந்தனர். நல்லவேளை நீதிமன்றம் தடை விதித்து விட்டது. துரோகிகள் கையில் இருப்பதால் இரட்டை இலை சின்னம் புனிதம் கெட்டுவிட்டது. நான் விவசாயி எனவும், கொங்கு மண்டலத்தை சேர்ந்தவன் எனவும் கூறி கொங்கு மண்டலத்தை கேவலப்படுத்தி வருகின்றார் எடப்பாடி பழனிச்சாமி. கொங்கு மண்டல மக்கள் துரோகத்திற்கு துணை நிற்கக் கூடாது. மே 23-ம் தேதி துரோகிகளின் ஆட்டம் முடிவுக்கு வரப்போகின்றது. இனி இப்படிப்பட்ட துரோகத்தை அரசியல்வாதிகள் யாரும் செய்யக் கூடாது என்று எண்ணும் அளவிற்கு பாடம் புகட்ட வேண்டும். அத்திகடவு திட்டத்தில் குடிநீர் ஒரு நாள் விட்டு ஓரு நாள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தறி நெசவாளர்களுக்காக நவீன தொழில்பூங்கா அமைக்கப்படும். உதவி தொகையாக 4,000 ரூபாய் வழங்கப்படும், என தெரிவித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...