நீலகிரி : குன்னூரில் அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் அரிய வகை மர அணில் அனைவரிடமும் சகஜமாக பழகி வரும் சம்பவம் சுற்றுலாப் பயணிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நீலகிரி : குன்னூரில் அடர்ந்த வனப்பகுதியில் வசிக்கும் அரிய வகை மர அணில் அனைவரிடமும் சகஜமாக பழகி வரும் சம்பவம் சுற்றுலாப் பயணிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த காடுகளில் வாழும் மர அணில், பார்ப்பதற்கு பிரபோசிஸ் குரங்கைப் போன்ற தோற்றம் கொண்டது. இவ்வகை அணில்கள் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் வசித்து வருகின்றன. இந்த மர அணில் அவ்வப்போது அருகே உள்ள பழக்கடைகளுக்கு வந்து பழங்களை எடுத்து சென்று உண்டு வருகின்றன. தற்போது, அப்பகுதியில் உள்ள பழக்கடைகாரர்களிடம்.
சகஜமாக பழகி வருவதால், அவர்களிடம் பழங்களை வாங்கி உண்டு வருகின்றன. இதை யாரும் தொந்தரவு செய்யாததால், அனைவரிடம் சகஜமாக பழகி வருகின்றன. மேலும், இப்பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மர அணிலுக்கு பழங்கள் கொடுத்து செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.