பார்சலை டெலிவரி செய்யாததால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க ஃபர்ஸ்ட் பிளைட் கூரியர் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவையில் செயல்பட்டு வரும் டேட்டா ஃபீல்டு இந்தியா பிரைவேட் லிமிடேட் நிறுவனம், கடந்த 2015-ம் ஆண்டு தங்களது தயாரிப்புத் துறைக்கு தேவையான சார்ஜர் கேபிள் உதிரி பாகங்களை சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. அந்நிறுவனமும் அசல் பில் ரசிது உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, அந்த உதிரி பாகங்களுடன் சேர்த்து ஃபர்ஸ்ட் பிளைட் கூரியரிர் மூலமாக அனுப்பியது.
2 நாட்களில் வந்து சேர வேண்டிய பார்சல் நீண்ட நாட்களாகியும் வராததால், சம்பந்தப்பட்ட கோவை மற்றும் சென்னையில் உள்ள ஃபர்ஸ்ட் பிளைட் கூரியர் அலுவலங்களுக்கு அடுத்தடுத்த புகார்களை நேரிலும், மின்னஞ்சல் மூலமாகவும் டேட்டா ஃபீல்டு இந்தியா பிரைவேட் லிமிடேட் நிறுவனம் அளித்தது. ஆனால், கூரியர் நிறுவனம் எந்த பதிலும் அளிக்காமல் அலட்சியம் காட்டி வந்தது. பின்னர், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால், டேட்டா ஃபீல்டு இந்தியா பிரைவேட் லிமிடேட் நிறுவனம், சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனம் மீது கடந்த 2015-ம் ஆண்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, பார்சலை டெலிவரி செய்யாததால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் 9 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க ஃபர்ஸ்ட் பிளைட் கூரியர் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. மேலும், வழக்கு செலவு ரூ. 3,000 செலுத்தவும் ஆணையிட்ட நீதிபதிகள், 2 மாதத்திற்குள் இந்த தொகையை செலுத்த வேண்டும் என கெடு விதித்தனர்.