மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு தமிழிசை கண்டனம்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என, பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என, பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது:- இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனை சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு தொடங்குகிறது.

நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்கு நான் இன்று கேள்வி கேட்க வந்திருக்கிறேன், அப்படி நினைத்துக் கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டிச் சொல்வேன், என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மாகத்மா காந்தி கொலை செய்யப்பட்ட ந்ட்டையே பதறச் செய்தது. அந்த செயலை செய்த கோட்சே தூக்கிலிடப்பட்டான். இந்த நிலையில், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்து தீவிரவாதம் என்று வார்த்தையை பயன்படுத்தியதோடு மட்டுல்லாமல், சுதந்திர இந்தியாவின் முத்ல் தீவிரவாதி இந்து எனக் கூறியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மதக்கலவரத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் பேசியது கண்டிக்கத்தக்கது. பிரச்சாரக் கூட்டங்களில் மதக்கலவரங்களை ஏற்படும் வகையில் பேசிய கமல்ஹாசன் மீது இந்திய தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்து தீவிரவாதம் என்று பேசுவது விஷமத்தனமான உள்நோக்கம் கொண்டது. எனவே, இது போன்று பேசுபவர்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். திரைநடிப்பு முடிந்து வாய்ப்பு கிடைக்காத கமல், அரசியல் வாய்ப்புக்காக கண்டபடி பேசுவது கண்டத்திற்குரியது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...