சூலூர் இடைத்தேர்தல் : குடுகுடுப்பைகாரன் வேடம் அணிந்து தி.மு.க. பிரமுகர் விநோத பிரச்சாரம்

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் குடு குடுப்பைகாரன் வேடம் அணிந்து குடு குடுப்பைஅடித்து பொதுமக்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் குடு குடுப்பைகாரன் வேடம் அணிந்து குடு குடுப்பைஅடித்து பொதுமக்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

தி.மு.க. தலைமை கழக பேச்சாளராக இருப்பவர் சேலம் கோவிந்தன். இவர் இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர் பகுதியில் முகாமிட்டு குடு குடுப்பைக்காரன் வேடம் அணிந்து குடு குடுப்பை அடித்து பொது மக்களிடம் தி.மு.க.விற்காக நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகின்றார். சூலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் சென்று குடு குடுப்பை அடித்தபடி, நாடு நல்லா இருக்க, நல்ல திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க தி.மு.க.விற்கு ஓட்டு போடுங்க... ஜக்கம்மா சொல்றா... ஜக்கம்மா சொல்றா... என கூறியபடி வாக்கு சேகரித்தார். முதலில் அவரை பார்க்கும் பொதுமக்கள் குடு குடுப்பைக்காரன் என்றே நினைக்கின்றனர். அதன் பின்னர், அவர் பேசுவதை உற்று கவனித்த பின்பே, அவர் தி.மு.க.விற்காக பிரச்சாரம் செய்கின்றார் என்பதை அறிந்து கொள்கின்றனர். 

இது குறித்து தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் பேட்டியளித்ததாவது :- தி.மு.க.விற்காக மேடை, வாகனங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, மக்களின் மன நிலையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்முறையாக குடு குடுப்பை அடித்து பிரச்சாரம் மேற்கொண்டேன். அது கை கொடுத்ததால் இந்த 4 தொகுதி இடைத்தேர்தல்களிலும் குடு குடுப்பைகாரன் வேடம் அணிந்து, குடு குடுப்பை அடித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, தற்போது சூலூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். மக்கள் மனநிலையில் உதய சூரியன்தான் இருக்கின்றது என்பது தெரிகின்றது. ஜக்கம்மா பெயரை சொல்லி வாக்கு சேகரிப்பதால் ஒரு சில இடங்களில் அ.தி.மு.க.வினர் பிரச்சினை செய்கின்றனர்.

குடு குடுப்பை அடிக்கும் தொழிலை குலத் தொழிலாக கொண்ட சமூகத்தை சேர்ந்தவன் நான். நாளை அ.தி.மு.க.வினர் என் மீது வழக்கு தொடுத்தாலும், குடு குடுப்பை அடிப்பது என் குலத்தொழில் என்பதால், அதை சட்டரீதியாக எதிர்கொள்வேன். தி.மு.க. என்ற இயக்கத்தின் மீது கொண்ட மரியாதையால், நான் குடு குடுப்பைக்காரன் வேடம் அணிந்து நடித்துல் கொண்டு இருக்கின்றேன். ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்பதால், இந்த நடிப்பு தேவைப்படுகின்றது, எனக் கூறினார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...